பன்றி காய்ச்சல் பயமா? சந்தேகமா இருக்கா?

பன்றி காய்ச்சல் பயமா? உங்களுக்கு அது வந்திருக்குமோன்னு சந்தேகமா இருக்கா? அப்படின்னா தொடர்ந்து இதைப் படிங்க...!

1 ) . பன்றிக் காய்ச்சலுக்கு அறிகுறியாக அதிக காய்ச்சலும் , உடம்பு வலியும் ஏற்படும் . இது சாதாரண காய்ச்சல் என்று நீங்கள் நினைக்கலாம் .

ஆனால் மாத்திரை எடுத்துக் கொண்ட பிறகும் சரியாகவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகவும் .

2 ) . சாதாரண மூகமுடிகள் பயன்படாது . என்-95 வகை மூகமுடிகளை தான் பயன்படுத்த வேண்டும் .

3) . உங்களால் மூச்சு விட சிரமமாக இருந்தாலோ அல்லது உங்கள் குழந்தைகள் சோர்வு அடைவது போன்று தெரிந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகவும் . பன்றிக் காய்ச்சல் நிமோனியாவாக மாறினால் மிகவும் ஆபத்து .

4 ) . உங்களின் நோய் எதிர்ப்பு சக்திக்கு இந்த நோய் புதிதல்ல . இந்த வைரஸ் கிருமிகள் காற்றில் 2009 ஆண்டு முதல் இருந்து வருவதால் , நமது உடம்பு இதற்கு ஏற்றாற் போன்று எதிர்ப்பு சக்தியை உருவாக்கி இருக்கும் .

5 ) . என் 95 மூகமுடியை அணியும் போது தொற்று ஏற்படாதவாறு மக்கள் கவனமாக பயன்படுத்த வேண்டும் .

6 ) . பன்றிக் காய்ச்சல் முழுமையாக குணப்படுத்தக்கூடிய நோய் . எனவே பயப்பட வேண்டாம் .

7 ) . பன்றிக் காய்ச்சல் இருப்பதை மருத்துவமனையில் பரிசோதனை மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.